காவேரிப்பட்டணம்: ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேர் கைது.

77பார்த்தது
காவேரிப்பட்டணம்: ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் முருகவேல் (49) ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கும். போச்சம்பள்ளி அருகே உள்ள மொரசம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (40) ஆகியோருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சரவணன், செல்லம்பட்டி பிரதாப் (35), காவாப்பட்டி வேலு (41) ஆகியோர் முருகவேலை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், பிரதாப், வேலு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி