பொதுமக்கள் இருப்பிடத்திற்கே சென்று அதிகாரிகள் மனுக்களை வாங்கும் வகையில் கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மனுக்கள் அளிக்க தகுதி வாய்ந்த 15 துறைகளில் 11 துறைகளில் கோரிக்கைகளை வலியுறுத்தி 335 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.