கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியின் இயற்பியல் துறை மாணவர், மாணவியர் பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கல்வி சுற்றுலாவாக நேற்று (நவம்பர் 29) சென்றனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மூலம் விண்வெளிக்கு செலுத்தப்பட்ட ஆரிய வட்ட பிருத்திவி அக்னி செயற்கைக்கோள் மற்றும் சந்திராயன் 3 ஆகியவற்றை பற்றி அறிந்து கொண்டனர். மேலும் செயற்கைக்கோள்களின் ஆராய்ச்சி கூடம் இராக்கெட் ஏறுவதற்கு பயன்படும் இயந்திர உதிரி பாகங்கள் எரிபொருள்கள் பற்றியும் தெரிந்து கொண்டனர். உதவி பேராசிரியர்கள் செயற்கைக்கோள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.