குருபரப்பள்ளி: வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு.

51பார்த்தது
குருபரப்பள்ளி: வேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்துள்ள வராகசந்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி திம்மக்கா (64) இவர் சம்வம் அன்று குழிப்பள்ளம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற வேன் மூதாட்டி மீது மோதியதில் திம்மக்கா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி