கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய மோட்டூர் ஸ்ரீ வெள்ளிமலையில் வீற்றிருக்கும் முருகன் திருக்கோவில் ஆண்டுத்தோறும் ஆடி கிருத்திகை, தை பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் வெகு விமர்ச்சியாக கொண்டப்பட்டு வருகிறது, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆடி கிருத்திகை விழா ஶ்ரீவெள்ளிமலை முருகன் திருக்கோவில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது,
இதன் முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது,
பின்னர் சிறப்பு பூஜைகளுடன் கொடி மரத்தில் கொடி ஏற்றி வைத்து கற்பூர தீபாதரனைகள் காண்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து திருக்கோவில் கருவறையில் வீந்திருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாதரனைகளும் வெகு சிறப்பாக நடைப்பெற்றது,
இந்த கொடியேற்று விழாவில் கிருஷ்ணகிரி, பெரிய மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
கோவில் தர்மகர்தா காளியப்பன் தலைமையில் நடைப்பெற்று வரும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பெரிய கவுண்டர் கஜேந்திரன், பழனிவேல், நாகராஜ், கணேசன், கோவில் பூசாரி பெருமாள், பிரசாத்,
திம்மராயன், வீராசாமி, நித்தீன், சிவகுமார், பம்பை அரிசந்திரன், திருமதி ராதா காளியப்பன் உள்ளிட்ட கிராம மக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.