கிருஷ்ணகிரியில் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழா

73பார்த்தது
கிருஷ்ணகிரியில் திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழா
கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த மகோத்சவ திருவிழா கடந்த 2-ஆம் தேதி அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. 

இந்த நிலையில், திருப்பதி நாடகசபா சார்பில் நாடகம் நடத்தினர். இதில், அர்ஜூனன் வேடமணிந்த நாடக கலைஞர் நாடக திடலில் நிறுத்தப்பட்டிருந்த தபசு மரத்தில் பாட்டு பாடியபடி மேலே ஏறினார். அப்போது, குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்க வேண்டி பிரார்த்தனை செய்து கொண்ட பெண்களுக்கு எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினார்.

தொடர்புடைய செய்தி