கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பஸ் நிலைய நுழை வாயிலில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் கடந்த சில நாளாக மின் விளக்குகள் எரியாத நிலையில் உள்ளது. மாலை வகுப்புகளை முடித்துவிட்டு செல்லும் பள்ளி மாணவர்கள் இரவு நேரங்களில் பணி முடித்து வீடு திரும்பும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் வெளிச்சம் இல்லாமல் அவதி அடைகின்றனர். இதனால் அதிகாரிகள் விரைந்து மின் விளக்குகள் அமைக்க பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.