கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோட்டப்பட்டியில் அரசம்பட்டி தென்னை விவசாயம் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் லாபகரமான அரசம்பட்டி தென்னை சாகுபடி கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அரசம்பட்டி தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி தலைமை தாங்கி உரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.