கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி கலையரங்கில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
மாவட்ட ஆட்சியர் திருமதி
சரயு தலைமையில் நடைபெற்றுவரும் இந்த புத்தகத் திருவிழா ஐந்து தினங்கள் நடைபெறுகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலமையிலான அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இலவச பாட புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள், உயர்கல்வி பயில கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மேலும் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் நூலகங்கள் மற்றும் பிரம்மாண்டமான பட்டி மன்றம் நடைபெற்றது. தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் தலைமையில் சிறப்பான பட்டிமன்றம் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் பாபு, வேளான்மை இணை இயக்குநர் பச்சியப்பன், நேர்முக உதவியாளர் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர்.