கிருஷ்ணகிரியில் காங்கிரஸ்சார் ஆர்ப்பாட்டம்

69பார்த்தது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை நாடாளுமன்ற வளாகத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் வலியுறுத்தினார். இதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கண்டன பேரணி நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பழைய பேட்டை காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணி சென்றது. பேரணியின்போது பதாகைகளை ஏந்தியவர்கள் ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி