காதலுக்கு எதிர்ப்பு - கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

4044பார்த்தது
காதலுக்கு எதிர்ப்பு - கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் சிவப்பிரகாசம் (20). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதை பெற்றோர் மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவப்பிரகாசம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி