கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுத்தேரி முருகன்கொட்டாயை சேர்ந்தவர் வடிவேலன் (36) இவருடைய மனைவி சத்யபிரியா (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது, அந்த நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், வடிவேலன் இவரது தாய் கன்னியம்மாள் ஆகியோர் சத்திய பிரியாவிடம் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சத்யபிரியா புகார் கொடுத்தார். அதன்பேரில், வடிவேலன் மற்றும் கன்னியம்மாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.