கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

82பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியை அடுத்துள்ள தாசரிப்பள்ளியைச் சேர்ந்தவர் சிவகுமார் மகன் அமர்நாத் (15). தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் இவர் தாசரிப்பள்ளியில் உள்ள தென்னந்தோப்பில் கொக்கி மூலம் தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் கொக்கி சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் உடலைக் கீழே இறக்கி இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி