கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள பேருந்துள்ளி கிராமத்தில் பொது நிதி மாவட்ட ஊராட்சி (2024-2025) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்துகொண்டு நிழற்கூடத்தை திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜன், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.