கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெரு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பசாமி திருக்கோவில் 8-ம் ஆண்டு வருடாபிஷேகம் மற்றும் மண்டல பூஜை நடைபெற்றது. நேற்று ஐயப்ப சாமி பல்லக்குக்கு உற்சவம் நடைபெற்றது. இதில் கேரளத்து பம்பை மேளம், செண்டி மேளம் முழுங்க சாமி வேடங்களும், மயிலாட்டம், பம்பை ஆட்டம், கர்நாடகா வீரபத்ர சுவாமி வேடங்களில் நடனமாடினர். இதில் திரளானோர் பலர் கலந்துக்கொண்டனர். இந்த விழா சிறப்பு ஏற்பாடுகள் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவில் சேவா ட்ரஸ்ட் மூலமாக நடைபெற்றது.