எம்பி கோபிநாத் சாம்பல் ரயில்வே நிலையம் வருகை

1069பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல்பட்டி ரயில்வே நிலையம் வழியாக கோவையில் இருந்து திருப்பதிக்கு விரைவு ரயில் நின்று செல்லும் அனுமதியை பெற்று தந்தார்.
இதனை அடுத்து
கிருஷ்ணகிரி மாவட்டம் சாம்பல் பட்டி முதல் திருப்பதி வரை செல்லும் திருப்பதி விரைவு ரயில் சாம்பல் பட்டி நிலைத்யில் நின்று செல்வதையடுத்து அந்த ரயிலை வரவேற்கும் விதமாக தற்போதைய
கிருஷ்ணகிரி பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் தலைமையில் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் காங்கிரஸ் கட்சியினர் ரயிலுக்கு பூஜைகள் செய்தும், வாழை மரம் தோரணங்கள் கட்டி பூஜைகள் செய்து மகிழ்ந்தனர்,
பின்னர் சாம்பபட்டி ரயில்வே நிலையத்தில் நின்று சென்ற கோவை திருப்பதி விரைவு ரயிலை திருப்பதிக்கு நாடாளு மன்ற உறுப்பினர் கோபிநாத் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
மேலும்
இந்த விழாவின் போது முன்னால் மாவட்டத் தலைவர்கள் குமாரவேல், நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத் தலைவர்கள் பி. சி. சேகர், ரகமத்துல்லா, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன், மாநில செயலாளர் ஆறுமுகம், ராஜகுமாரவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, மாநில செயலாளர் ஏகாம்பவாணன் வட்டாரத் தலைவர் தனஞ்ஜெயன்,
சேவாத்தள மாவட்டத்தலைவர் தேவராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியை
சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துக்
கொண்டனர்கள். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தொடர்புடைய செய்தி