பஸ் - டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் காயம்

569பார்த்தது
பஸ் - டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் காயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள சவுளூர் பகுதியை சேர்ந்தவர் விமல் (25). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது நண்பருடன் டூவீலரில் ஒசூர் நோக்கி சென்றார். சூளகிரி அருகே கோபசந்திரம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு போருந்தும் மோதி கொண்டதில் விமல் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி