ஏலச்சீட்டு நடத்தி 1.5 கோடி ரூபாய் மோசடி

83பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஏலச்சீட்டு நடத்தி 1.5 கோடி ரூபாய் மோசடி குடும்பத்துடன் தலைமறைவு - பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்ட பள்ளி மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதியை சார்ந்த மணிவண்ணன், முருகன், தங்கமணி, சுதாகர், மணி பாண்டி, உட்பட 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் அந்த மனுவில்.

மேற்கண்ட பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், அவரது மனைவி குமாரி, மகள் உஷா, மகன் விக்னேஷ், ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையில் மாதத்திற்கு ஐந்து முறையில் சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் 200க்கும் மேற்பட்ட நபர்கள் ஏலச் சீட்டு போட்டு உள்ளனர். மேற்கண்ட நபர்கள் கடந்த பல ஆண்டுகளாக சீட்டு ஏலம் நடத்தி முறையாக பணம் வழங்கி வந்துள்ளனர் .

இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் சீட்டு போட்டுள்ளனர். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக முறையாக சீட்டு நடத்தவில்லை, சீட்டு எடுத்த நபர்களுக்கு முறையாக பணம் வழங்கவில்லை, இதை அறிந்து சீட்டு நடத்திய மேற்கண்ட நபர்களிடம் கேட்டபோது ஓரிரு தினங்களில் சீட்டு நடத்துவதாகவும், சீட்டு எடுத்தவர்கள் பணம் கேட்டபோது ஓரிரு தினங்களில் தருவதாக கூறினர்.

இதனை நம்பி இருந்த நிலையில் திடீரென மேற்கண்ட சீட்டு நடத்திய கிருஷ்ணன், அவரது மனைவி குமாரி, மகள் உஷா, மகன் விக்னேஷ், ஆகியோர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, செல் போன் அனைத்தும் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. ஏலச்சீட்டு நடத்தி பணம் தராமல் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளது தெரியவருகிறது. தற்போது வரையில் 150 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சீட்டு பணம் ரூபாய் 1.5 கோடி ரூபாய் அளவிற்கு தர வேண்டும், எனவே மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் செலுத்திய சீட்டு பணத்தை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி