ஓசூர் - Hosur

பாலூர்: காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

பாலூர்: காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அடுத்துள்ள சூடாபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருடைய மனைவி ஹேமாவதி (27) இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில் தினேசுக்கு மது குடிக்கும பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஹேமாவதி கடந்த 19-ஆம் தேதி மாலை சூடாபுரத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த பாகலூர் போலீசார் ஹேமாவதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலை குறித்து ஒசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் அனில் வாகரே விசாரணை நடத்தி வருகிறார்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி