கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள ஆர். சி. தேவாலயம் எதிரே உள்ள பியூட்டி பார்லரில் விபசாரம் நடப்பதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் வந்த்தின் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
இதை அடுத்து பியூட்டி பார்லர் நடத்தி வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 31 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் மீட்கப்பட்ட இளம் பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.