கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ. 100 கோடியில் மேம்படுத்தப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனையை கிருஷ்ணகிரி மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் ஆ. தார்மர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர் பணியிடங்கள் குறித்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் யாரேனும் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்ற புகார் எழுந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.