கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பி. எஸ். திம்மசந்திரம் ஊராட்சி சித்தல்தொட்டி கிராமம் சுமார் 50 ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் சிந்தல்தொட்டி கிராமத்திற்கு புதிதாக பஸ் வசதி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இன்று (ஜூன் 4) சிந்தல்தொட்டி கிராமம் முதல் பேரிகை அரசு மேல்நிலைப்பள்ளி வரை பேருந்தை இயக்கி ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் பேருந்து வழித்தடத்தை துவங்கி வைத்தார். இதில் மாணவர்கள், பொது மக்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.