போட்டி தேர்வுகளில் நாளிதழ்களின் பங்கு என்ற கருத்தரங்கம்

59பார்த்தது
ஓசூர் காமராஜ் காலனியில் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையம் உள்ளது. இந்த மையத்தில் உள்ள நூல்களை படித்து மாணவர்கள் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஓசூர் மக்கள் சங்கம் இணைந்து, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் நாளிதழ்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கத்தை நடத்தினர். இந்த கருத்தரங்கில் மாநகராட்சி ஆணையாளர் சினேகா மற்றும் ஐ ஆர் எஸ் அதிகாரி கிருத்திக் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் தினசரி நாளிதழ்களின் பங்கு என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மக்கள் சங்கம் முன்னாள் தலைவர் சரவணன் தலைவர் பிரசாத் மற்றும் ஓய்வு பெற்ற சப் கலெக்டர் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி