வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய வாலிபருக்கு காப்பு.

52பார்த்தது
வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்திய வாலிபருக்கு காப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலுார் முனீஸ்வர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா (42) சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் மவுலா(28) கூலித்தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் இவர் தன் தாய் பாத்திமாவிடம் சம்வம் அன்று மது வாங்க பணம் கேட்டுள்ளார். ஆனால் பாத்திமா பணம் கொடுக்க மறுத்துள்ளார். வீட்டிற்குள் இருந்த பொருட்களை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தார். பாத்திமா கொடுத்த புகாரின் பேரில் மவுலாவை பாகலுார் போலீசார் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி