கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெரியார்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி ஆண்கள் வந்து போவதாக அந்த பகுதி பொதுமக்கள் ஓசூர் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டில் சோதனை செய்த போது அந்த வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்த சைலஜா (40) என்ற பெண் புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.