தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

77பார்த்தது
தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
ஓசூரில் கனரக வாகனங்கள் தயார் செய்யும் அசோக் லேலண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவருடைய பதவி காலம் விரைவில் முடிவடைந்து உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் நிர்வாகத்துடன் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தொழிற்சாலையில் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஓசூர் சிப்காட் 1 மற்றும் சிப்காட் 2 என இரண்டு இடங்களிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி