மர்ம நபர்கள் குடிசைக்கு தீ வைப்பு-போலீசார் விசாரணை.

84பார்த்தது
மர்ம நபர்கள் குடிசைக்கு தீ வைப்பு-போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அடுத்துள்ள நாரலப்பள்ளி பகுதியில் புறம்போக்கு நிலத்தில் ராஜா என்பவர், குடிசை அமைத்து இருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை அந்த குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதில் குடிசை எரிந்து சேதமானது. இது தொடர்பாக வி. ஏ. ஒ. சுரேஷ்குமார் மகராஜகடை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி