கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள சுண்டகிரி என்ற இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சர்வீஸ் சாலையில் இரண்டு புறங்களிலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மராட்டிய மாநிலத்திலிருந்து மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த கனரக லாரி நேற்று (ஜூன் 2) மாலை சேலம் நோக்கிச் சென்றபோது சுண்டகிரி சர்வீஸ் சாலை பிரிவில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நின்றன.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளானர். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று கண்டெய்னர் லாரியை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.