கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி நீட் அகாதெமியில் படித்து 145 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர் இவர்களுக்கான பாராட்டு விழாவிற்கு அதியமான் பொறியில் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறங்காவலர் லாசியா தம்பிதுரை தலைமை வகித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயங்களை வழங்கினார். வேளாங்கண்ணி கல்விக் குழுமத்தின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களா முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் ரவிசசந்திரன், பர்கூர் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.