கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள ஜெ. காருப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சையத்கான் மகள் ஹர்ஷியாகனம் (22). நேற்றுமுன்தினம் (டிசம்பர் 19) வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தந்தை கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் இதே பகுதியைச் சேர்ந்த ஜமீர் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.