ஒசூரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் திறப்பு

62பார்த்தது
ஓசூர் அண்ணாமலை நகர் பகுதியில் இயங்கி வரும் எலைட்சர் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் திறக்கப்பட்டது. இதில் ரோட்டேரியன் தர்மேஷ் பட்டேல், ஓசூர் மக்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் பிரசாத், விசிக கர்நாடக மாநில செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி மையத்தை நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

இந்த மையத்தில் 6 துப்பாக்கிச் சுடும் ரேஞ்சும், ஒரு எலக்ட்ரானிக்கல் ரேஞ்சும் உள்ளது. புதிதாக திறக்கப்பட்ட இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டனர். மாணவர்களுக்காக கோடைகால சிறப்பு பயிற்சிகளும் விரைவில் நடைபெற உள்ளது. திறப்பு விழாவில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பயிற்சி மையத்தின் உரிமையாளர் இன்டர்நேஷனல் விளையாட்டு வீரர் ஜெபஸ்டின் செய்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி