கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கொளதாசபுரம் தரப்பு, கொளதாசபுரம் கூட்ரோடு அருகில் கனிமம் கடத்தல் தொடர்பாக ஓசூர் வட்டாட்சியர் தலைமையில் குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்த போது உரிய அனுமதிச்சீட்டு இன்றி எம்.சண்ட் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து பாகலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.