தமிழ்நாடு பிராமண சங்கத்தின் ஓசூர் மாநகர கிளை சார்பில், உலக நன்மைக்காக ஆடி மாத திருவிளக்கு பூஜை, ஓசூரில் நேற்று நடைபெற்றது. ஓசூர் நியூ ஏ. எஸ். டி. சி. ஹட்கோ பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி தலைவி ரோகிணி கணேஷ் தலைமை தாங்கி, திருவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகர பிராமண சங்க தலைவர் சுதா நாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். இதில், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.