கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், தர்பூசணி பழங்களில் ரசாயன ஊசி செலுத்தி விற்பனை செய்ததும், மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் அதிக அளவில் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆப்பிள்களை அழகாகக் காட்சியளிக்கவும், நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்கவும் மெழுகு பூசப்படுகிறது. இதனால் உடலில் கேன்சர் போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிகாரிகள் வியாபாரிகளை கண்டித்து, தவறு செய்யும் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தனர்.