கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஸ்ரீ மாரியம்மா தேவதை கோலாட்ட இசைக்குழு சார்பில் புக்கசாகரம் கிராமத்தில் சலங்கை பூஜை விழா நேற்று நடைபெற்றது. பண்டைய கால மரபுகளை மீட்டெடுக்கும் வகையிலும், பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையிலும் இந்த கோலாட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. என்றும் இந்தக் கோலாட்ட அணியில் பெண்கள் அதிகமாக ஆடி வருகின்றனர். ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் வகையில் இந்தக் கோலாட்ட நிகழ்ச்சி நடத்தி வருகிறோம் என்று கோலாட்ட பயிற்சியாளர் ரத்தினம்மாள் தெரிவித்தார்.