ஒடிசா மாநிலத்தை கடைவஹாலா பகுதியை சேர்ந்தவர் சுனில் பெகாரா (22) இவர் ஓசூர் பாகலூர் அடுத்த தாளாப்பள்ளியில் தங்கி கூலி
வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் தனது உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் சுனில் பெகாராவை திருமணம் செய்ய முடியாது என கூறினார். இதனால் மனவேதனையில் சுனில் பெகாரா தாளப்பள்ளி பகுதியில் தான் தங்கி இருந்த செங்கல் சூளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகலூர் போலீசார்
விசா ரணை நடத்தி வருகின்றனர்.