கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படியாக பையுடன் வந்த நபரை சோதனை செய்தனர். அவர் 12 கிலோ குட்கா கடத்தியது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அருள் (34) என்பதும், பெங்களூருவில் இருந்து பேருந்தில் குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.