ஓசூர்: ஜெராக்ஸ் கடைக்காரரை தாக்கியவர் கைது.

52பார்த்தது
ஓசூர்: ஜெராக்ஸ் கடைக்காரரை தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீலமேக நகர் பகுதியை சேர்ந்தவர் ராகவா (36) ஜெராக்ஸ் கடை வைத்துள்ளர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராகவா, பார்வதி என்பவரிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றார். பார்வதி கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவம் அன்று ஓசூர் சானசந்திரம் வ. உ. சி. நகரை சேர்ந்த கஜேந்திரன் (33) என்பவர், ராகவாவிடம் பார்வதிக்கு தரவேண்டிய பணத்தை தருமாறு கூறினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ராகவாவை கஜேந்திரன் தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் ஒசூர் டவுன் போலீசார் வழக்குப்ப பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி