கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் திருமணமாகி கணவரை இழந்த பெண்ணை மணந்தார். அப்பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் இரண்டு பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
முதல் கணவரின் இரண்டாவது மகளான 13 வயது சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதற்கு காரணம் வளர்ப்பு தந்தை என உறுதியான நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.