கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, உதவி கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைப் பற்றி விரிவாக உரையாற்றினர். மேலும் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை உதவி கலெக்டரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.