தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள அஞ்சஹள்ளி அருகே அத்தானூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (30) ஓசூர் தென்றல் நகரை சேர்ந்தவர் அமரேஷ் (40) சீட்டு பணம் செலுத்துவது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு வந்துள்ளது. அப்போது தினேஷ்குமாரை அமரேஷ் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் சிப்காட் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து அமரேஷ், மதன் (40) முனிராஜ் (44) வெங்கடேஷ் (40) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.