முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

55பார்த்தது
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் அதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டது. பின்னர் ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதேபோல் ஓசூர் ஜூஜூவாடியில், ராயக்கோட்டை அட்கோ மற்றும் மத்திகிரி பகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணன் ரெட்டி கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளையும் அன்னதானத்தையும் பொதுமக்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராஜு, அசோகா, மஞ்சுநாத் வாசுதேவன், மாமன்ற உறுப்பினர்கள் ஜேபி என்கிற ஜெயப்பிரகாஷ், குபேரன் என்கிற சங்கர் வட்ட செயலாளர் ரகுமான், ஹேம குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓசூர் ஜூஜூவாடியில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மட்டையால் பந்தை அடித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி