கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சமூக வாழ்வுரிமை அமைப்பு சார்பில் நேற்று முதலாம் ஆண்டு மனித உரிமை விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் கார்த்திக், சீனிவாசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுதுகோல், நோட்டு, புத்தகம், டிபன் பாக்ஸ் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும், கணவரை இழந்த பெண்களுக்கும், சமையலுக்கு தேவையான பொருட்கள், ஊக்கத்தொகையுடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.