கிருஷ்ணகிரியை அடுத்த ஒரப்பத்தில் உள்ள சிவகாமியம்மாள் கல்வி நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் கொண்டாடினர். விழாவை சிவகாமியம்மாள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குமரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து துறைவாரியாக மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினார்கள்.
விழாவையொட்டி பாரம்பரிய விளையாட்டுகளான உறியடித்தல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தாளாளர் குமரன் பாராட்டினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.