கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வி. ஐ. பி. நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி மஞ்சுளா (33) இவர் நேற்று முன்தினம் சூளகிரி பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள கனரா வங்கியில் மூன்று லட்சம் ரூபாயை எடுத்து வந்து தனது டூவீலரில் வைத்து விட்டு சந்தைத்தெருவில் உள்ள தந்தையை பார்க்க சென்ற போது கடை முன்பு தனது டூவீலரை நிறுத்திவிட்டு மஞ்சுளா உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர் கள் டூவீலரில் பையில் வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை திரு டிச்சென்றனர். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த மஞ்சுளா இது குறித்து சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.