கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலிபிளவரின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூளகிரி அத்திமுகம் பேரிக்கை உள்ளிட்ட பல பகுதிகளில் அதிக அளவில் காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர் இந்த வருடம் சூளகிரி பகுதிகளில் காலிபிளவர் விளைச்சல் குறைந்ததால் சந்தைகளில் ஒரு காலிபிளவர் விலை 45 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.