கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள பெலத்தூர் பகுதியில் வி.ஏ.ஓ மூர்த்தி மற்றும் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசு புறம்போக்கு நிலத்தில் சிலர் மண் அள்ளிக் கொண்டு இருந்தனர். அலுவலர்களைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வி.ஏ.ஓ மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு பொக்லைன், 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய லாரி மற்றும் பொக்லைன் எந்திர இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.