கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை மூலவர் தென்னீஸ்வரனுக்கும் நந்தி பகவனுக்கும் வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.