கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள அட்டகுறுக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகம்மா (65) கணவரை இழந்து தனது மகள், மருமகனுடன் உள்ளார். மகள், மருமகன் விவசாயப் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது நாகம்மாள் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, மாலை 4 மணி அளவில் அவரது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் காவல் நிலையம் மற்றும்
தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்னர். சம்வஇடத்தற்கு வந்த போலீசார் வீட்ட்டில் சென்று பார்போது அவர் பலத்த வெட்டுக் காயங்களுடன் இருந்த நாகம்மாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் போகும் வழியிலேயே அவா் உயிரிழந்ததார்.
போலீசார் விசாரணை மேந்கொண்டதில் வீட்டில் நாகம்மா தனியாக இருப்பதை தெரிந்துக்கொண்ட மா்ம நபா்கள் அவரை கத்தியால் குத்தி வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து, வீட்டில் இருந்த தானிய மூட்டைகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
சம்வஇடத்தற்கு வந்த சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.