கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஒசூர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியில், சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில், ஒசூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், துணை ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், நவீன் ஆகியோர் ஏற்பாட்டில், பேரிகை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அவர் அனைவருக்கும் கட்சித் துண்டு மற்றும் வேஷ்டிகளை அணிவித்து அதிமுகவில் இணைந்ததற்கு வரவேற்பு அளித்தார்.